ஒளியோன்

தனியுரிமை அறிவிப்பு

நீங்கள் எங்களுக்கு எழுதும்போது என்ன விவரங்கள் எங்களிடம் வருகின்றன, அவற்றை நாங்கள் எப்படிக் கையாளுகிறோம் — எளிய மொழியில்.

கடைசியாகப் புதுப்பித்தது: 22 அக்டோபர் 2026

ஒளியோன் ரிசர்ச் என்பது சென்னையைச் சேர்ந்த ஒளியோன் குழுமத்தின் ஆய்வுப் பிரிவு. இந்த அறிவிப்பு oliyonresearch.com, oliyonresearch.in ஆகிய தளங்களுக்கு மட்டும் பொருந்தும். நிகண்டு, சுழி ஆகிய கருவிகளுக்குத் தனித்தனிக் கணக்கு முறையும் தனி அறிவிப்பும் உண்டு; அங்குப் பதிவு செய்யும்போது அதைக் காண்பீர்கள்.

எங்களிடம் வரும் விவரங்கள்

  • தொடர்புப் படிவம்: உங்கள் பெயர், மின்னஞ்சல், தேர்ந்தெடுத்த தலைப்பு, செய்தி; நீங்கள் கொடுத்தால் தொலைபேசி எண்ணும் நிறுவனப் பெயரும்.
  • மின்னஞ்சல்: connect@oliyon.in முகவரிக்கு நீங்கள் அனுப்பும் எதுவும்.
  • சேவையகப் பதிவுகள்: தளத்தைப் பாதுகாக்கவும் இயக்கவும் எங்கள் ஹோஸ்டிங் சேவை வழக்கமான விவரங்களை (IP முகவரி, பார்த்த பக்கம், உலாவி, நேரம்) பதிவு செய்கிறது. இவற்றைக் கொண்டு உங்களை அடையாளம் காண நாங்கள் முயல்வதில்லை.

அவற்றை என்ன செய்கிறோம்

உங்கள் கடிதத்திற்குப் பதிலளிக்க, அந்த உரையாடலைத் தொடர — அவ்வளவுதான். விற்பதில்லை, விளம்பரத்திற்காகப் பகிர்வதில்லை, அஞ்சல் பட்டியலில் சேர்ப்பதில்லை. ஒத்துழைப்புத் திட்டமோ ஒரு சுவடியோ வந்தால், அந்தப் பணி நடக்கும் வரை அந்தக் கடிதங்களை வைத்திருப்போம்.

படிவம் எங்களை அடையும் வழி

தொடர்புப் படிவம் FormSubmit எனும் சேவை வழியாக connect@oliyon.in முகவரிக்கு வருகிறது; அனுப்பிய பின் அச்சேவை உங்கள் செய்தியைச் சேமித்து வைப்பதில்லை. எங்கள் மின்னஞ்சல் Google Workspace-இல் இயங்குகிறது.

குக்கீகளும் கண்காணிப்பும்

இந்தத் தளம் சொந்தக் குக்கீகளை வைப்பதில்லை; பகுப்பாய்வு, விளம்பர ஸ்கிரிப்ட் எதுவும் இல்லை. எழுத்துருக்கள் மட்டும் Google Fonts-இலிருந்து வருகின்றன; அதற்கான கோரிக்கை உங்கள் உலாவியிலிருந்து அங்குச் செல்லும்.

உங்கள் உரிமைகள்

உங்களைப் பற்றி எங்களிடம் என்ன இருக்கிறது எனக் கேட்கலாம்; திருத்தச் சொல்லலாம்; நீக்கச் சொல்லலாம். connect@oliyon.in முகவரிக்கு எழுதுங்கள்; விரைவில் செய்வோம்.

மாற்றங்கள்

இந்த அறிவிப்பு மாறும்போது மேலே உள்ள தேதியும் மாறும்.